Our Feeds


Tuesday, April 25, 2023

News Editor

சைக்கிள் ஓட்டப் போட்டியில் சக போட்டியாளரைத் தள்ளிவிட்டுச் சென்ற இராணுவ சிப்பாய்




 சைக்கிள் ஓட்டப் போட்டியின் போது இராணுவ சைக்கிள் ஓட்டுநர் ஒருவரைத் தள்ளிவிட்டு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக இராணுவ சைக்கிள் அணியைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஹிரண பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்டவர் கொஹுவல இராணுவ முகாமில் கடமையாற்றும் சாதாரண சிப்பாய் எனவும், முகாமின் சைக்கிள் ஓட்டும் அணியைச் சேர்ந்த கோப்ரல் ஒருவரே குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


பாணந்துறை, ஹிரண தெக்கவத்த புத்தாண்டு விழாவின் இறுதியில் நடைபெற்ற துவிச்சக்கரவண்டி போட்டியின் முடிவில் ஒரு குழுவாக மூன்று போட்டியாளர்கள் வந்துள்ளதாகவும், போட்டியின் முடிவில் சுமார் 100 மீற்றர் தூரம் இருந்தபோது, ​​குறித்த சிப்பாய்,  கோப்ரலை கையால் தள்ளிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வீதியில் இருந்து தள்ளப்பட்டு வீதிக்கு அருகில் போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த 7 வயது பிள்ளையின் மீது மோதி குறித்த சிப்பாய் கீழே விழுந்ததையடுத்து இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில் குறித்த பிள்ளை பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.


கீழே விழுந்த கோப்ரல் சில நிமிடங்களுக்கு முன்னர் மணல் மூட்டை மீது தன்னையும் தள்ளிவிட்டதாக இராணுவ வீரர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »