வருமான வரியை குறைக்குமாறு எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடும் போது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நிபந்தனையொன்று உள்ளதாகவும், வரியை நினைத்தவாறு படிப்படியாக குறைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.