Our Feeds


Sunday, April 2, 2023

News Editor

இங்கிலாந்து பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு இத்தனை கோடி செலவா?

 

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமான பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது. 


குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி பயணத்திற்கு செய்துவிட்டு மறுநாள் திரும்பி வருவதற்காக, இங்கிலாந்து அரசாங்கம் 108,000 யூரோக்கள் தனியார் ஜெட் பயணத்திற்கு செலவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஒரு வாரம் கழித்து, இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு 340,000 யூரோக்களுக்கு மேல் செலவில் விஜயம் செய்துள்ளார். 


டிசம்பர் மாதத்தில் சுனக்கின் லாட்வியா மற்றும் எஸ்டோனியா பயணத்திற்கு 62,498 யூரோ பயணச் செலவு ஏற்பட்டுள்ளது. 


எனவே, இங்கிலாந்து பிரதமர் ரிஷி இந்திய ரூபாய் மதிப்பின்படி 4.46 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 


மக்கள் தங்களின் சொந்த கட்டணத்தையே செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது என்று கூறப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »