Our Feeds


Friday, April 7, 2023

SHAHNI RAMEES

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதம்..!

 

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் சுமார் 50 நாட்களாக தாமதடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

ஆசிரியர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் முன்வராமையே இதற்கு காரணமென பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

 

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் கலந்துகொள்வது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

 

மதிப்பீட்டு பணிகளுக்காக சுமார் 5000 ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியமெனவும் அவர் கூறினார்.

 

இவ்வாறான பின்புலத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைந்துள்ளமையினால், சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட தினத்தில் நடத்துவதிலும் சிக்கல் நிலைமை காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »