இன்று (29) காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொலன்னாவை நீர் விநியோகப்பிரிவில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
நீர் வெட்டு அமுலாகும் பகுதிகள் பின்வருமாறு,
கொலன்னாவ மாநகர சபை, மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எதுல்கோட்டே, நாவல, கொஸ்வத்த மற்றும் இராஜகிரிய மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அனைத்து கிளை வீதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.