நாடளாவிய ரீதியில் இன்று(06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சமுர்த்தி வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சேவை நியமனம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி ஊழியர்கள் சங்கம் மற்றும் அலுவலக உத்தியோத்தர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் (06) ஆரம்பமாகிறது.