உணவுகளை சுவைக்க பயன்படுத்தப்படும் செயற்கை சுவையூட்டிகளை மருதானை-டெக்னிக்கல் சந்தியில் உள்ள உணவு விற்பனை நிலையமொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த இடத்தில் காலாவதியான உணவும், காலாவதி ஆகாத உணவும் விநியோகம் செய்யப்பட்டதாக சோதனையில் இருந்து தெரியவந்ததாக அதன் சிரேஷ்ட அதிகாரி பீ.எஸ்.யு.பீ பெரேரா தெரிவித்தார்.
காலாவதியான உணவுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த முறைப்பாட்டையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உணவை சுவைக்கப் பயன்படுத்தப்படும் செயற்கை சுவையூட்டிகள 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் காலாவதியாகிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சுவையூட்டும் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படாமல், உணவின் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த உணவுக் கிடங்கு தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என சோதனையை மேற்கொண்ட சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி மேலும் தெரிவித்தார்.