கல்வி பொதுத் தாராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தாமதமானமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கினால், விடைத்தாள்களை உடனடியாக மதிப்பிடும் பணியை ஆரம்பிக்க தயார் என அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.