மாத்தளை மாவட்டத்தில் கடந்த வருடம் 85 எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கடந்த வருடம் நடைபெற்ற மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தெரிய வந்துள்ளது.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்/ பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன.
இங்கு கருத்து தெரிவித்த மாத்தளை மாவட்ட எஸ்.டி.டி பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திருமதி இருகா ராஜபக்ஷ, தொற்றுக்குள்ளானவர்களில் ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலான பாலினம் அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மாத்தளை, தம்புள்ளை, சீகிரியா மற்றும் ஏனைய சுற்றுலாப் பகுதிகளிலும், மசாஜ் நிலையங்களை அண்மித்த பகுதிகளிலும் பாலியல் தொழிலாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களின் தனியுரிமையைப் பாதுகாத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.