நாட்டின் மிகப்பெரிய சந்தையான இந்த பகுதியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்துள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவியுள்ளது.
விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில், நூற்றுக்கணக்கான ஆடை கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளது.
மேலும் 8 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.