கென்யாவில் பாதிரியார் ஒருவரின் போதனையை நம்பி உண்ணாவிரதம் கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம் உள்ளது.
இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மேக்கன்ஜி நெதாங்கே. இவர் தனது போதனையின் போது, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள்தான் கடவுளின் தொண்டர்கள் என கூறியுள்ளார்.
இதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து இறந்துள்ளனர். இவர்கள் எல்லாம் அருகில் உள்ள காடுகளில் மொத்தமாக புதைக்கப்பட்டுள்ளனர்.
சிலரது உடல்கள் புதைக்கப்படாமலேயே கிடந்தன.
இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என ரகசிய தகவல் தெரிய வந்ததையடுத்து பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இது குறித்து நடத்திய விசாரணையில், உண்ணாவிரதம் இருந்து இறந்தவர்கள் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் உடல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், 212 பேர் மாயமாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.