Our Feeds


Wednesday, April 5, 2023

SHAHNI RAMEES

தேங்காய் எண்ணெயில் 72% ஆனவை தரநிலை சோதனைக்கு உட்படுத்தாதவை

 

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கையில் நுகரப்படும் தேங்காய் எண்ணெயில் எழுபத்திரண்டு வீதத்திற்கு தரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான ஐந்து நட்சத்திர சின்னத்தை ஏழு தேங்காய் எண்ணெய் ஆலைகள் மட்டுமே பெற்றுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.


இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் தென்னை உற்பத்திகளின் தரத் தரங்களை அமைத்து பேணுவது தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பாகும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, தென்னை நார் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு உரிய தரப்பினருக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட துங்கன்னாவ தென்னை நார் அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிலையம் 2020 ஆம் ஆண்டு முதல் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் திருத்தம் செய்யப்படாத காரணத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.

கடந்த நான்காண்டுகளில் பாமாயில் இறக்குமதி 199433 மெட்ரிக் டன் எனவும், அதற்கேற்ப, தரமான தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காமல், உள்நாட்டு தேங்காய் எண்ணையை பாமாயில் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணையுடன் ஈடுபடுத்துவது இலக்குகளுடன் ஒத்துப்போவதில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாட்டு அறிக்கையிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »