Our Feeds


Sunday, April 9, 2023

ShortNews Admin

71 விமானங்கள் 9 போர்க்கப்பல்களுடன் தாய்வானை மீண்டும் சுற்றி வளைத்தது சீனா!



தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென் சமீபத்தில் தென் அமெரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தார். 


சீனாவின் எச்சரிக்கையையும் மீறி கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென்னை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி இடையே முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. 


இதனால், ஆத்திரமடைந்த சீனா, தாய்வானை சுற்றி வளைத்து போர் பயிற்சியை தொடங்கியது.


தாய்வானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் கடுமையான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன என சீன இராணுவமும் தெரிவித்தது.


இந்த போர் பயிற்சியானது இன்றும் தொடர்ந்தது. இன்று காலை 6 மணியளவில், தாய்வானை சுற்றி 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் வட்டமிட்டன. 


இதனால், தாய்வானை சுற்றி இன்று 2-வது நாளாக சீனா போர் பயிற்சியை தொடர்ந்துள்ளது. இவற்றில் 45 விமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 


அவற்றில், ஜே-11, ஜே-10, ஜே-16, ஒய்-8 ஏ.எஸ்.டபிள்யூ., ஒய்-20, கே.ஜே.-500 உள்ளிட்ட விமானங்களும் அடங்கும். அவை தாய்வான் ஜலசந்தியின் மைய பகுதிக்குள் நுழைந்து தென்மேற்கு நகருக்குள் சென்றது என தாய்வான் அரசாங்கம் தெரிவிக்கின்றது. 


இதனை தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், தாய்வான் எங்களது தாய்வீடு. நாங்கள் எங்கே போனாலும், என்னவெல்லாம் எதிர்கொண்டாலும், அதெல்லாம் ஒரு விசயமே இல்லை. 


தாய்வான் எப்போதும் அழகாகவும், வசீகரிக்கும் வகையிலும் உள்ளது.


இந்த நிலத்தின் ஒவ்வொரு கதையும் எங்களது நினைவுகளில் பதிந்துள்ளது. 


எங்களது தாய்நாட்டை மற்றும் எங்களது வீட்டை பாதுகாக்க முழு மனதோடு, நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »