இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா டிப்போ பிரதேச கட்டுப்பாட்டிலுள்ள நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, ஹங்குராங்கெத்த, கொத்மலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய ஏழு பஸ் டிப்போகளுக்கு 26 புதிய பஸ் வண்டிகள் நேற்று (9) ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா கிரகறி வாவி கரையில் இலங்கை போக்குவரத்து மத்திய சபையினரால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வைபவத்தில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் பந்துல குணவர்தன, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ் பி .திஸாநாயக்க , சீ பி . ரட்னாயக்க, மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட பஸ் டிப்போ அத்தியட்சகர்கள்,டிப்போ ஊழியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
நானுஓயா நிருபர்