ஹட்டன் ஊடாக மகாவலி ஆற்றுக்கு நீரேந்தும் ஹட்டன்ஓயாவை அண்மித்த காட்டுப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையில ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.என்.தெஹிகமவின் ஆலோசனையின் பேரில், ஹட்டன் ஸ்டெதன் தோட்டத்திற்கு அருகாமையில் ஹட்டன்ஓயா அண்மித்த காட்டுப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களை சுற்றிவளைத்ததுடன், அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அதே தோட்டத்தில் வசிப்பவர்கள் எனவும், சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.