நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலைக்கு இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 22 நிலக்கரி கப்பல்களை இறக்குமதி செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.