பிரான்ஸில் Île-Saint-Denis தங்கியிருந்த அகதிகள் நேற்று (26) காலை பொலிஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
500 அகதிகள் இங்கு தங்கியிருந்த நிலையில், நேற்று காலை இங்கு வந்த பொலிஸார் மற்றும் ஜொந்தாமினர் அகதிகளை வெளியேற்றினர்.
குறித்த பகுதியானது 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயார்ப்படுத்தப்படவுள்ளது.
அதையடுத்து, நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்த அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.