குருநாகல் ஹெட்டிபொல - கிராதலாவ பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 முட்டைகளை நுகர்வோர் அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.
இன்று (29) பிற்பகல் முட்டை கொள்வனவு செய்வதற்கு முகவர் ஒருவரை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பிரகாரம் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக அதிகார சபையின் சோதனைப் பிரிவின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி பி.எஸ்.யூ.பி. பெரேரா தெரிவித்தார்.
கடையின் உரிமையாளரான பெண்ணொருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் எதிர்வரும் திங்கட்கிழமை ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.