பாகிஸ்தானின் பணவீக்கம் சுமார் 5 தசாப்தங்களின் பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் 35.37 சதவீதத்தை எட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி மாதாந்தப் பணவீக்கம் 3.72 சதவீதமாக இருந்தது.
அதேநேரம் கடந்த ஆண்டு மொத்த பணவீக்க அளவு 27.26 சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பல வருட நிதி முறைகேடு மற்றும் அரசியல் ஸ்திரமின்மை என்பன பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சரிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளன.
அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து, அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கும் நிலையில் தற்போதுள்ள கடனைச் செலுத்துவதற்காக பாகிஸ்தானுக்கு பில்லியன் கணக்கான டொலர்கள் நிதி தேவைப்படுகிறது.