சமூக வலைத்தள பாவனையில் அதிகளவான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வட்ஸ்அப் செயலியானது, தொடர்ந்து பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
செய்திகளை அனுப்புவதை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அம்சம் நிறைந்ததாகவும் மாற்றும் முயற்சியில், விரைவில் செய்திகளைத் திருத்தல், அரட்டையில் குறிப்பிட்ட செய்தியைப் Pin செய்தல் உள்ளிட்ட பல வசதிகளை வழங்கவுள்ளது.
இந்த அம்சங்கள் டெலிகிராம் போன்ற சில செயலிகளில் ஏற்கனவே கிடைத்தாலும், அவை வட்ஸ்அப் பயனர்களுக்கு வரவேற்கத் தக்க மேலதிக அம்சமாகவுள்ளது.
செய்திகளைத் திருத்துதல்
இந்த அம்சம் ஊடாக அனுப்பிய செய்தியில், விரைவில் தவறுகளை எளிதாக திருத்தலாம் அல்லது குறிப்பிட்ட செய்திகளை நீக்காமல் கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். அனுப்பிய செய்திகளைத் இதற்காக 15 செக்கன் கால அவகாசம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு செய்தியைத் திருத்தினால், அது அதன் குமிழிக்குள் "திருத்தப்பட்டது" என்ற அடையாளத்துடன் குறிக்கப்படும்.
செய்திகளைப் Pin செய்தல்
இது டெலிகிராம் போன்ற பிற செய்தியிடல் செயலிகளில் பல ஆண்டுகளாகக் கொண்டிருக்கும் மற்றொரு அம்சமாகும். அரட்டை சாளரத்தில் செய்திகளை பின் செய்ய வட்ஸ்அப் விரைவில் அனுமதிக்கும். இதனை குழு மற்றும் தனிப்பட்ட அரட்டைகளில் பயன்படுத்த முடியும்.
ஒரு செய்தியை PIN செய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட செய்தியை வேகமாக அணுகலாம். அரட்டை குமிழியில் செய்தி பின் செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும் சிறிய குறியீடு காண்பிக்கும்.
மறைந்து போகும் செய்திகளுக்கான 15 கால விருப்பங்கள்
மறைந்து போகும் செய்திகளுக்காக ஏற்கனவே உள்ள கால அவகாசத்துக்கு மேலதிகமாக மேலும் பல புதிய கால அளவு தெரிவுகளை வட்ஸ்அப் விரைவில் வெளியிடவுள்ளது.
அதன்படி, 1 மணிநேரம், 3 மணிநேரம், 6 மணிநேரம், 12 மணிநேரம், 2 நாட்கள், 3 நாட்கள், 4 நாட்கள், 5 நாட்கள், 6 நாட்கள், 14 நாட்கள், 21 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள், 180 நாட்கள் மற்றும் 1 ஆண்டுகள் என்றவாறு கால அவகாசத்தை தெரிவுசெய்யலாம்.
இது முக்கியமான மற்றும் ரகசியமான செய்திகளுக்கு குறுகிய, கால அளவு பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் நீளமானவை, நீண்ட காலத்திற்கு சேமிப்பிற்கு இடையூறு ஏற்படாத வகையில் செய்திகளை அழிக்க அனுமதிக்கும்.
குரல் வடிவ செய்தியை ஒருமுறை மட்டும் கேட்டல்
ஒருமுறை படங்களைப் பார்ப்பது போல, விரைவில் குரல் வடிவ செய்தியை ஒருமுறை மாத்திரம் கேட்பதற்கு அனுப்ப முடியும். இந்த செய்திகளை ஒருமுறை மட்டுமே இயக்க முடியும்.
மிக முக்கியமான குரல் பதிவை அனுப்பினால் அல்லது பெறுநரை நம்பவில்லை என்றால், இது பயனுள்ள அம்சமாக இருக்கலாம்.
வேகமான WhatsApp Windows பயன்பாடு
இது கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோஸ் செயற்பாட்டு தளத்தில் வட்ஸ்அப்பிற்கான புதிய செயலியை வெளியிட்டுள்ளது. இதனூடாக தற்போது காணொளி அழைப்புகளில் 32 பேர் வரை சேர்க்கலாம்.
பெரிய மடிக்கணினி திரைகளைப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. இதன் பயன்பாடு தற்போது வேகமாகவும் உள்ளது.
நிலையான பயன்பாட்டிற்கான இந்த மேம்படுத்தல்களை வட்ஸ்அப் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மேலும் பல அம்சங்களையும் மெட்டா அறிமுகப்படுத்தவுள்ளது.