கொள்ளுப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் அமைந்துள்ள இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குடிபோதையில் தகாத முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்
மேலும், இவர்கள் ஈச்சலம்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு வருனின்ற 17 ஆம் திகதி வரை கொழும்பில் விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக அழைத்து வரப்பட்டதாக அப்பகுதியிலுள்ள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இங்கு தங்கியிருந்த அதிகாரிகள் கொழும்பில் விசேட கடமைகளுக்காக வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல பொலிஸ் அதிகாரிகள் குடிபோதையில் தவறாக நடந்துகொள்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டது.
இதன்போது நடத்தப்பட்ட சோதனையில், குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் இந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் பிடிபட்டனர்.