ஜெருஸலேமிலுள்ள புனித அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்துக்குள் இஸ்ரேலிய பொலிஸார் இன்று நுழைந்ததையடுத்து, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இம்மோதல்களையடுத்து சுமார் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம்மோதல்களால் 14 பேர் காயமடைந்துள்ளனர் என பலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய பொலிஸார் இன்று அதிகாலை புனித அல்-அக்சா பள்ளிவாசலை முற்றுகையிட்டனர். அப்பள்ளிவாசலை
பள்ளிவாசலுக்குள் உள்ள கிளர்ச்சியாளர்களை அகற்றுவதற்காக இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், காஸா பிராந்தியத்தை ஆளும் ஹமாஸ் இயக்கம் இது 'முன்னொருபோதும் இல்லாத குற்றம்' என விமர்சித்ததுடன், இப்பள்ளிவாசலை பாதுகாப்பதற்காக பெருந்திரளாக செல்லுமாறு மேற்குக் கரையிலுள்ள முஸ்லிம்களை கோரியுள்ளது.
பொலிஸார் ஸ்டன் கிறனேட்டுகள் மற்றும் றப்பர் தோட்டாக்கள் மூலம் தாக்கியதாகவும் இதனால் குறைந்தபட்சம் 14 பேர் காயமடைந்தனர் எனவும் பலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் பின்ன காஸாவிலிந்து இஸ்ரேலை நோக்கி குறைந்தபட்சம் 9 ரொக்கெட்கள் ஏவப்பட்டுள்ளன.