ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் காரணமாக அங்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது.
எனவே அங்கிருந்து வாழ்வாதாரம் தேடி பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கின்றனர்.
துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டுள்ளனர். அப்போது திடீரென அதிக காற்று வீசியதால் அந்த படகுகள் கடலில் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சிலர் மாயமானதாக கூறப்படுகின்றது. அவர்களின் கதி என்ன என்பது தெரியாததால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகின்றது.
எனினும் ,மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.