Our Feeds


Wednesday, April 5, 2023

News Editor

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு




 ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா கடுமையான வறட்சி நிலவும் நாடுகளுள் ஒன்றாகும். கடந்த 2 வாரங்களாக அங்கு கனமழை பெய்து வருகின்றது. 


இதனால் இங்குள்ள ஷபெல்லே மற்றும் ஜூபா நதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


இந்த வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள், பாடசாலை கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. 


எனவே, 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த சம்பவத்தில் இதுவரை 21 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


வறட்சியால் பாதிக்கப்பட்ட சோமாலியாவுக்கு இந்த கனமழையானது ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்றாலும் அது ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள சில நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »