2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ சின்னத்தை இன்று சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.
மும்பையில் உள்ள வன்கடே மைதானத்தில் 2011 ஆண்டு எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கிண்ணத்தை வென்றது. அந்த வெற்றியின் 12 ஆவது வருட நிறைவை குறிக்கும் வகையில் அதேநாளில் இந்த சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.