Our Feeds


Saturday, April 8, 2023

ShortNews Admin

திருகோணமலையில் 200 வருட பழமையான பிள்ளையார் ஆலயம் பௌத்த ஆக்கிரமிப்புக்குள்ளாகுவதாக குற்றச்சாட்டு!



திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64ம் கட்டை மலையில் (பச்சனுார் மலை) அமைத்து வரும் பௌத்த விகாரைகள், அம்பாள் வழிபாட்டு எச்சங்கள் இருந்த இன்னொரு பகுதியும் நேற்று (07) பௌத்த துறவிகளால் விசேட பூசைகள் நடைபெற்றதாக மூதூர் இந்து மத குருமார் சங்கத் தலைவர் பாஸ்கர சர்மா தெரிவித்தார்.


200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மலையின் மீது பௌத்த விகாரை அமைத்து அங்கு அம்பாள் வழிபாடுகள் நடைபெற்றதற்கான எச்சங்கள் காணப்பட்ட இடத்தை இந்துக்களுக்கு வழங்குவதாக ஏற்கனவே ஒப்புக்கொண்ட பௌத்த துறவிகள் இன்று அப்பகுதியை சுத்தம் செய்து கிரியைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

மேலும் 2 வருடத்திற்கு முன் இவ்விடத்திற்கு வந்தவர்களுக்கு அனுமதி வழங்கி விகாரை அமைக்கப்படுகிறது.

200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயத்தை கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் விசனம் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »