Our Feeds


Monday, April 10, 2023

SHAHNI RAMEES

ரூ.14,000 பெருந்தோட்ட மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்- ரணிலிடம் நேரடியாக மனோ வலியுறுத்து

 

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆலோசனையுடன் குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவு குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 14,000/= இக்குடும்பங்களது வங்கி கணக்குகள் மூலம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதார சீர்திருத்தம் நிகழும் போது, மென்மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் பிரிவினருக்கு இத்தகைய மாதாந்த நலன்புரி கொடுப்பனவு வழங்குவது சரியானது. இது தொடர்பில் அரசையும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய இலங்கையின் அபிவிருத்தி பங்காளர்களையும் பாராட்டுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.



தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்த நலன்புரி கொடுப்பனவு இலங்கையின் மிகவும் நாளாந்த பிரிவினரான பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். பதுளை, கண்டி, நுவரேலியா, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பின் அவிசாவளை, களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்ட குடும்பங்களை வழமைபோல் ஒதுக்கி விடுவதை நாம் இம்முறை ஏற்க போவதில்லை. நாளாந்த சம்பளம் ரூ. 1,000/+ ஆகவே மாதம் ரூ.25,000/+ என காகிதத்தில் கணக்கு எழுதி இம்மக்களை தவிர்க்க கூடாது. அதேபோல், பெருந்தோட்ட பிரதேசத்தில் தோட்டங்களில் வேலை செய்யாதோரும் வாழ்கிறார்கள். அவர்களும் குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவினரே. அவர்களுக்கும் இந்த மாதாந்த நலன்புரி கொடுப்பனவு கிடைக்க வேண்டும்.  



மாதாந்த மின்சார கட்டண பட்டியலில் 1 முதல் 90 வரை அலகுகளை பயன்படுத்துகின்ற குடும்பங்கள், குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவினராக கருதபடலாம். அப்படியானால் அரசியல் தலையீடு இல்லாமல் நியாயமான ஏழை குடும்பங்களுக்கு நலன்புரி கொடுபனவு கிடைக்க வழி ஏற்படும். இது எனது ஆலோசனையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி அவரிடம் நேரடியாக கூறியுள்ளார்.   


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »