ஆப்பிரிக்க நாடான புருண்டியில் சுரங்க தொழிலாளர்கள் பலர் சட்ட விரோதமாக குழிகள் தோண்டி அதில் இருந்து தங்கத்தை எடுப்பதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
வடமேற்கு மாகாணமான சிகிடோகியில் இரவு நேரத்தில் குழிகளை தோண்டி பலர் தங்கத்தை எடுத்துக் கொண்டிருந்தனர்.
தற்போது அங்கு மழைக்காலம் என்பதால் ருகோகோ ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் அவர்கள் தோண்டி வைத்திருந்த 2 சுரங்க குழிக்குள் தண்ணீர் சென்று அந்த குழிகள் இடிந்து விழுந்தன.
இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் குழிகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரை காணவில்லை என கூறப்படுகின்றது.