இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம், தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் பொலிஸாரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் வாகனம் வரும் வழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 10 பொலிஸார் மற்றும் பொலிஸ் வாகனத்தின் டிரைவர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின்படி அப்பகுதியில் ரோந்து பணிக்குச் சென்ற பொலிஸார். ரோந்துப் பணி முடிந்து திரும்பியபோது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.