அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று (27) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் தற்போது 1,347 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றில் 150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வருடாந்தம் 50 பில்லியன் ரூபாயை செலவழிக்கிறது. அதாவது 13.6 மில்லியன் அமெரிக்க டொலர். இந்த நிலையில், அமைச்சரவையின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மேலும் 40 பில்லியன் ரூபாயை நிதியமைச்சு ஒதுக்கியுள்ளது.” என்றார்.