Our Feeds


Thursday, March 23, 2023

ShortNews Admin

இந்தியாவிலிருந்து WhatsApp மூலம் போதைப் பொருள் கடத்தியவர் இலங்கையில் கைது.



இந்தியாவில் இருந்து வட்ஸ்அப் மூலம் செயற்படும் இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தலின் பிரதான முகவரான இனந்தெரியாத நபர் ஒருவர் மாலபே-மிஹிந்து மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.


சந்தேக நபருடன் சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான 42 கிராம் போதைப்பொருள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு நவீன கையடக்கத் தொலைபேசிகள், மூன்று வங்கி அட்டைகள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, இந்தியாவில் தலைமறைவாகி உள்ள பிரதான சந்தேகநபர், சந்தேகநபரின் தொலைபேசி வாயிலாக பொலிஸ் அதிகாரிகளை அழைத்து, போதைப்பொருளுக்கு எதிராக சாதாரண நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறும், அதற்காக பொலிஸாருக்கு 30 இலட்சம் ரூபா வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவில் இருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் இனந்தெரியாத சந்தேக நபரே, ஹரக் கட்டாவை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று டுபாய்க்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தென் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தை மையப்படுத்தி வட்ஸ்அப் தொழிநுட்பத்தின் ஊடாக வர்த்தகத்தை முன்னெடுத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​சில வருடங்களுக்கு முன்னர் வேறு ஒரு குற்றத்திற்காக சிறைச்சாலையில் இருந்த போதே அவர் இந்தியாவிலுள்ள கடத்தல்காரரை அடையாளம் கண்டுகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »