ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதிவான் விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதிவான் டி. என். இளங்கசிங்க உத்தரவிட்டார்.இந்தச் சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை மீண்டும் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மரணம் தற்செயலானதா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐவரடங்கிய விசேட வைத்திய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இது நீண்டகால விசாரணையாக மாறியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்தார்.
இந்நிலையிலேயே வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.