நுவரெலியா, லபுகலே தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாறையில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (05) காலை லபுகலே பிரதேசத்தில் அமைந்துள்ள மரக்கறிப் பண்ணை ஒன்றிலிருந்து மரக்கறிகளை ஏற்றிச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.