பண்டாரவளை – பூனாகலை, கபரகலையில் தொடர் குடியிருப்புகளில் நேற்றிரவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த 6 பேர் (3 பெண்கள், 3 ஆண்கள்) உடனடியாக பொதுமக்களால் மீட்கப்பட்டு கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என அனர்த்த முகாமை நிலையத்தினர் அய்வரிக்கு தெரிவித்தனர்.
கடைகள் மற்றும் குடியிருப்புகள் என 4 கட்டடங்கள் முற்றாகவும், 20 கட்டடங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இரண்டு தொடர் குடியிருப்புகளைச் சேர்ந்த 220 பேர் பூனாக்கலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.