ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுக் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
நேற்று (10) இரவு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் கூடையொன்றில் இருந்து குறித்த சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிசுவின் பெற்றோரான தம்பதி 26 வயதுடைய திருமணமாகாதர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மீனகய ரயிலில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் ரயில் அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் சிசுவின் பெற்றோரை கண்டறிய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த யுவதிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பு பகுதியில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 25ம் திகதி குழந்தை பிறந்துள்ள நிலையில், நேற்று ரயிலில் விடப்பட்டுள்ளது.
பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.