வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
அந்தப்பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொள்ள பொலிசார் முயன்றபோது பிரதேச மக்கள் தடுத்துள்ளனர்.
இதன்போது இரண்டு தரப்புகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.