Our Feeds


Wednesday, March 29, 2023

ShortNews Admin

ஒரு லட்சம் Subscribers களை எட்டியது ShortNews - இறைவனுக்கே புகழ் அனைத்தும்...!



இலங்கையின் தமிழ் மொழி மூல ஊடகத் துறையில் மிக மிக குறுகிய காலத்தில் ஒரு தனித்துவமான, நம்பிக்கையான செய்திச் சேவையாக மக்கள் மத்தியில் இடம்பிடித்த ShortNews செய்தித் தளம் இன்று YouTube இல் 1 லட்சம் Subscribers பெற்று சாதித்துள்ளது.


தமிழ் மொழியில் பல செய்திச் சேவைகள் ShortNews க்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை சமூகம் சார்பில் ShortNews  மாத்திரமே 1 லட்சம் Subscribers களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இந்தப் பயணத்தில் தொடர்ந்தும் எம்முடன் கைகோர்த்துப் பயணிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்தும் உங்களது ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,
ShortNews  ஊடகக் குழுமம்!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »