மொட்டு கட்சியானது எந்தவொரு தருணத்தில் மக்களின் உயிர்களை பாதுகாக்க பாடுபட்ட கட்சி என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் “எங்கள் கட்சி உறுப்பினர்களை துன்புறுத்தியவர்களுக்கு முறையாகவோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற முறையிலோ இழப்பீடு வழங்க வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணியினரைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் பொதுஜன பெரமுன பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறோம். மொட்டுக் கட்சி உயிர்களை காப்பாற்றிய கட்சி. எங்கள் கட்சியில் மக்களை கொன்ற தலைவர்கள் இல்லை. மக்கள் விடுதலை முன்னணி திசைக்காட்டியில் போட்டியிடுவதால் அதன் பின்னணியினை மாற்றிவிட முடியாது“ என்றார்.