பாலஸ்தீன நாட்டு தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பலஸ்தீன நில தின கலைக் கண்காட்சி இன்று (மார்ச் 15) கொழும்பு 7, லயோனல் வென்ட் கலையரங்கில் பிற்பகல் 12:30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், மார்ச் 16,17ம் திகதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
கண்காட்சியை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கலந்து கொண்டார்.
நான்கு முன்னணி ஓவியர்களின் ஓவியங்களால் இந்தக் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.