2023.02.28ம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மஸ்ஜித் சம்மேளனங்களின் உதவியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது பாதிக்கப்பட்ட பல மில்லியன் கணக்கான மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யும் நோக்கில் சேகரித்த பணத்தொகையை வெளிவிவகார அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி அவர்கள் முன்னிலையில் இலங்கைக்கான பாகிஸ்தானிய தூதுவர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி அவர்களிடம் ஒப்படைத்தது.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச்செயலாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்கள் உட்பட முஸ்லிம் வியாபார சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.