Our Feeds


Tuesday, March 28, 2023

Anonymous

PHOTOS: வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த, மாவனல்லை சாஹிரா பழைய மாணவிகளுக்கான Xecutive Chef Season 2

 



மாவனல்லை சாஹிரா கல்லூரியின் xZahirians அமைப்பின் பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்த கல்லூரியின் பழைய மாணவிகளுக்கான Xecutive Chef Season 2 போட்டி நிகழ்ச்சி 2023 மார்ச் மாதம் 12ம் திகதி மாவனல்லை ராலியா வரவேற்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.


இப்போட்டி நிகழ்ச்சியானது சிரேஷ்ட பிரிவு மற்றும் கனிஷ்ட பிரிவு என இரு பிரிவுகளாக நடைபெற்றதோடு பழைய மாணவிகள் தங்கள் பாடசாலை குழுக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் குழு நிகழ்ச்சியாக நடைபெற்றமை சிறப்பம்சமாகும். 


அத்துடன் இந்த நிகழ்வு நடைபெறும் வளாகத்தில் சிறு உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்குடன் Mini Boutique Bazaar ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவியும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான Dr. Faseeha Azmi கலந்து சிறப்பித்தார். 


போட்டி நிறைவடைந்த பின்னர் மாலை 4 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.


இரு பிரிவுகளிலும் வெற்றிபெற்ற குழுக்களின் விபரம் பின்வருமாறு,


கனிஷ்ட பிரிவு 

முதலாம் இடம் - 2018 A/L

இரண்டாம் இடம் - 2019 A/L


சிரேஷ்ட பிரிவு

முதலாம் இடம் - 2013 A/L

இரண்டாம் இடம் - 2015 A/L


இந்த நிகழ்வில் பெரியவர், சிறியோர் மற்றும் எல்லா சமூகங்களையும் சேர்ந்த அனைவரும் மகிழ்ச்சியாக கலந்து சிறப்பித்தனர்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »