Our Feeds


Sunday, March 12, 2023

ShortNews Admin

PHOTOS: முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் இஸ்லாமிய வழிகாட்டல்படி மட்டுமே திருத்தப்பட வேண்டும் - 37 ஆயிரம் கையெழுத்துடனான ஆவணம் நீதி அமைச்சரிடம் கையளிப்பு!



முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கான திருத்தமானது இஸ்லாமிய மார்க்க வழிகாட்டலின் அடிப்படையிலேயே செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக நாட்டின் பல பாகங்களிலும் சேகரிக்கப்பட்ட 37, 000 இற்கும் அதிகமான கையொப்பங்கள் அடங்கிய ஆவணம் கடந்த 10ம் திகதி நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களிடம் நீதி அமைச்சகத்தில் வைத்து  கையளிக்கப்பட்டது.


இந்த முக்கியமான சந்திப்பில் ஸ்ரீலங்கா ஷரியா கவுன்சிலின் பிரதிநிதிகளும் #strengthenMMDA அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் நீதி அமைச்சருக்கு; 


முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டமானது இஸ்லாத்தை பின்பற்றி வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் ஆளுகின்ற ஒரு சட்டம். அந்தச் சட்டமானது மார்க்க விதிமுறைகளை மீறாத வகையிலேயே திருத்தப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டலை வழங்குவதற்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கு மாத்திரமே அதிகாரம் உள்ளது. அந்த வழிகாட்டலுக்கு மாற்றமான திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. அது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் எதிர்ப்பைச் சம்பாதிக்கும் என்ற விடையம் எடுத்துச் சொல்லப்பட்டது.


மேலும் இன்று சட்டத்திருத்தத்தை மார்க்கத்திற்கு முரணான வகையில் செய்வதற்குக் கோருகின்ற பெண்கள் எமது சமூகத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம் பெண்களின் பிரதிநிதிகள் அல்ல. மாறாக அவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர்கள் என்ற விடயமும் ஏத்தி வைக்கப்பட்டது. 


அத்தோடு, புத்தளத்தைச் சேர்ந்த மெரும்பான்மையான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற புள்ளி விபரமும் அது எடுக்கப்பட்ட முறையும் தவறானது, உண்மைக்கு புறம்பானது என்ற விடயமும் எத்திவைக்கப்பட்டது.


அது மட்டுமின்றி முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் மற்றும் அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நீதி அமைச்சர்களாக இருந்தபோது, முஸ்லிம் சமூகத்தின் பாரிய அதிருப்தியைச் சம்பாதிக்க நேரும் என்ற காரணத்தினால் அவர்கள் நிறைவேற்றத் தயங்கிய முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தமானது இன்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் மூலம் நிறைவேற்ற எத்தனிக்கப்படுவதன் பின்னணி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


#strengthenMMDA









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »