நாவலப்பிட்டி நகரில் அமைந்துள்ள பிரபல தமிழ் மொழி மூல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் மூன்று மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு இளைஞர் குழு ஒன்று தொலைபேசி இலங்கங்களை வலுக்கட்டாயமாக கொடுத்தும் தினமும் சேட்டைகளில் ஈடுபட்டுவந்ததாகவும் இதனால் மாணவிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதனை அவதானித்த சக வகுப்பு மாணவர்கள் சேட்டைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு எடுத்துகூறி கண்டித்தமையே மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமென பாதிக்கப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மேற்படி பிரச்சினை நீண்ட நாட்களாக நிலவிவந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 6 ஆம் திகதி காயமுற்ற மாணவர்களில் ஒருவனின் வீட்டுக்கு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் குறித்த மாணவனைத் தாக்க முற்பட்டததாவும் இதன் போது நடந்த கைகலப்பில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் 7 ஆம் திகதியும் இரு மாணவர்களை மேற்குறிப்பிட்ட குழுவினர் தாக்கியதாகவும் எனினும் அவை சமசரம் செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை (08) பாடசாலை முடிந்து 1.30.மணியளவில் வீடு நோக்கி சென்ற மூன்று மாணவர்களையும் ஐந்து பேரடங்கிய குழு கடை ஒன்றுக்குள் இழுத்துச் சென்று தாக்கியதாகவும் இதன் போது தடுக்கச்சென்ற மாணவன் ஒருவனின் சகோதர் உட்பட தாக்குதல் மேற்கொண்ட மூவர் அடங்களாக ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து இரு தரப்பிலும் இருந்து கிடைக்கப்பெற்ற முறைபாடுகள் தொடர்பான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.