பயங்கரவாதத்துக்கு எதிராக எழுச்சி பெறும் மக்களையும், தொழிற்சங்கங்களையும் ஒடுக்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது என இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்துவதன் மூலம் மக்கள் மீது பாரிய சுமை வைக்கப்பட்டுள்ளது.
இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை, பேரம் பேசி விற்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்கள் இவற்றுள் உள்ளடங்குகின்றன.
இவற்றுக்கு எதிராக மக்களும், தொழிற்சங்கங்களும் நடத்தி வரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, பயங்கரவாத எதிர்ப்பு யோசனை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.