Our Feeds


Monday, March 13, 2023

ShortNews Admin

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு நிதியளிக்க சவூதி அரேபியா இணக்கம் - தௌபீக் MP



(றிப்தி அலி)


சவூதி அரே­பிய அர­சாங்கம் இலங்­கைக்­கான திட்­டங்­க­ளுக்கு தொடர்ந்தும் நிதி உத­வி­களை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக் தெரி­வித்தார்.


நாடு தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார நெரு­டிக்­க­டியில் இருந்து பாது­காக்கும் நோக்­கி­லேயே சவூதி அரே­பியா உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இந்த திட்­டங்கள் அனைத்தும் சவூதி அபி­வி­ருத்தி நிதி­யத்தின் ஊடாக மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், இதன் முதற் கட்­ட­மாக பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் தற்­போது கைவி­டப்­பட்­டுள்ள கிண்­ணியா, குறிஞ்­சாக்­கேணிப் பாலத்­திற்கு நிதி­யு­தவி வழங்க இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

தற்­போது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள சவூதி அபி­வி­ருத்தி நிதி­யத்தின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் நெடுஞ்­சா­லைகள் மற்றும் போக்­கு­வ­ரத்து அமைச்சின் செய­லாளர் எம்.எம்.பீ.கே. மாயா­துன்­ன­விற்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்று கடந்த திங்­கட்­கி­ழமை அமைச்சில் இடம்­பெற்­றுள்­ளது.

இதன்­போதே, குறிஞ்­சாக்­கேணிப் பாலத்­திற்கு நிதி­யு­தவி வழங்க சவூதி அபி­வி­ருத்தி நிதி­யத்தின் இணக்கம் வெளி­யிட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. குறிஞ்­சாக்­கேணி ஆற்றில் தற்­கா­லி­கமாக செயற்­ப­டுத்­தப்­பட்டு வந்த வள்ளம், கடந்த 2021 நவம்­பரில் கவிழ்ந்து வீழ்ந்­த­மை­யினால் எட்டு பேர் உயி­ரி­ழந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, முஹம்மத் அல் மசூத் தலை­மையில் இலங்கை வந்­துள்ள சவூதி அபி­வி­ருத்தி நிதிய பிர­தி­நி­தி­க­ளுக்கும் வெளி­வி­வகார அமைச்சர் அலி சப்­ரிக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்று கடந்த திங்­கட்­கி­ழமை அமைச்சில் இடம்­பெற்­றது.

இந்த சந்­திப்பில் சவூதி அபி­வி­ருத்தி நிதிய பிர­தி­நி­தி­களின் தற்­போ­தைய இலங்கை விஜ­யத்­திற்­கான இணைப்­பா­ள­ராக செயற்­ப­டு­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் இலங்­கைக்­கான சவூதி அரே­பியத் தூதுவர் ஹாலித் அல் கஹ்­தானி ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

“இலங்கை எதிர்­கொண்­டுள்ள இந்த இக்­கட்­டான சூழ்­நி­லையில் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உத­விகள் தாம­த­மா­னாலும் சவூதி அரே­பி­யாவின் தொடர்ச்­சி­யான நிதி உத­வி­க­ளுக்கு நாம் நன்­றி­யு­டை­ய­வர்­க­ளாக இருக்­கின்றோம்” என அமைச்சர் அலி சப்ரி இந்த சந்­திப்பில் தெரி­வித்­துள்ளார்.

அத்­தோடு, இத்­தூதுக் குழு­வி­னரின் விஜயம், இலங்கை மற்றும் சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வு­களை மேலும் வலுவடையச் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் 12 அபிவிருத்தித் திட்டங்களுக்களை மேற்கொள்வதற்காக அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தினால் இதுவரை கிட்டத்தட்ட 424.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »