உள்ளூர் சந்தையில் உரங்களின் விலையை குறைக்க பல தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பில் உரிய நிறுவனங்களினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, 50 கிலோகிராம் யூரியா மூடை ஒன்றின் விலை 18,500 ரூபாவில் இருந்து 11,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.