இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாயின் பெறுமதியும், கூகுல் வெளியிட்டுள்ள இலங்கை ரூபாவின் பெறுமதியும் வித்தியாசமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317.72 ஆகவும், விற்பனை பெறுமதி 335.41 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.
எனினும், அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி கூகுலில் 236.81 ரூபாயாக காணப்படுகின்றது. இது சுமார் 81.46 வித்தியாசமாக உள்ளது.
இதுவரை இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலருக்கான ரூபாய் பெறுமதியும், கூகுல் தரவும் சமமாக இருந்த நிலையில், இன்று வித்தியாசமாக காணப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன என்று அனைவர் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதேவேளை, பங்கு பரிவர்த்தனையிலும் டொலரின் பெறுமதி 326 ரூபாயாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.