வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உனின் தந்தை கிம் ஜோங்–2 மறைவுக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து புதிய ஜனாதிபதியா பொறுப்பு ஏற்று, அவரின் தந்தை போன்றே இவரும் கம்யூனிச அரசை நிர்வகித்து வருகிறார்.
அதனால் தன்னை எதிர்ப்பவர்களையும், அரசுக்கு எதிராக சதி செய்பவர்களையும் தண்டிக்கும் வகையில் மரணத் தண்டனை விதித்து வருகிறார்.
கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடையுள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.
ஜனாதிபதியாக கிம் ஜோங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில், 'பியூரோ 10' என்றழைக்கப்படும், அந்த நாட்டின் உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், 'கூகுள்' இணையதளத்தில் சமீபத்தில், ஜனாதிபதி கிம் ஜோங் உன் குறித்த தகவல்களை விவரமாக தேடிய நிலையில், இதனை எப்படியோ அறிந்து கொண்ட கிம் ஜோங் உன் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கியால் சுடும் படைப் பிரிவினரால், அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இது, அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மரணத் தண்டனைக்கு எதிராகக் குரல் எழுந்து வரும் நிலையில், வடகொரிய ஜனாதிபதி மரணத் தண்டனை விதிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.