இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு
ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
208 நாடுகள் கலந்து கொண்ட இந்த பொதுச் சபையில் இலங்கைக்கு சர்வதேச கால்பந்து தடை விதிக்க 197 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.
விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டு சுதந்திரத்தை மீறுதல், தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை விதித்தல், நியாயமான தேர்தலை நடத்துவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட தேர்தல் பாதை வரைபடத்தை ஒருதலைப்பட்சமாக மீறுதல் போன்ற காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.