Our Feeds


Monday, March 27, 2023

News Editor

CPC ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


 இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சுயாதீன ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மிகச் சிறந்த இலாபத்தை ஈட்டி வருகிறது.

இப்படியுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனம் எவ்வித காரணங்களும் இன்றி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 600 எரிவாயு நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் போகிறது. 

இந்த ஒப்பந்தம்தான் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள மிகப்பெரிய மோசடி. 

ஏனெனில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்த அரசுக்கு எந்த டொலர்களும் கிடைக்காது. இந்த அமைச்சரவை பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கேள்விப்பட்டுள்ளோம்.

எனவே இந்த தேசத்துரோக செயலை முறியடிக்கும் வகையில் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களான நாங்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்துடன் இந்த எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ளோம் என இறுதியாக கூறுகின்றோம். 

கட்சி, தொழிற்சங்க வேறுபாடுகள் இல்லாமல், எமது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை காப்பாற்றவும், எங்கள் வேலையைப் பாதுகாக்கவும் அனைத்து பெற்றோலிய தொழிலாளர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »